இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, 2025-2026 கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

தேர்வெழுதிய 214 மாணவர்களில் 201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
முதலிடம் அஞ்சலி மீரா 553/600 மதிப்பெண்கள்,இரண்டாமிடம் பூமிகா தேவி 533/600 மதிப்பெண்கள், மூன்றாமிடம் நந்தினி மேலி 521/600 மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும் பள்ளி கல்விக்குழுவினர் தலைமையாசிரியர், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் மற்றும் ஜமாத்தார்கள் வாழ்த்து தெரிவித்தனர்.




