இராமநாதபுரம்

கருங்குளம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்

கருங்குளம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்


ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 26- ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த
வியாழக்கிழமை இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கூட்டு வழிபாடு செய்தனர்.
நேற்று முன்தினம் கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று அதிகாலை அக்னிச்சட்டி,
கரும்பாலை தொட்டில் உட்பட பல்வேறு நேர்த்திகடன் பக்தர்கள் செலுத்தினர். மேலும் பக்தர்கள் உடல்நலம் ஆரோக்கியம் பெற வேண்டி தங்களது உடல் முழுவதும் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு, வேப்பிலையை கையில் ஏந்தி மேளதாள இசைவாத்தியங்களுடன் கருங்குளம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக நடனமாடி ஊர்வலமாக 100 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இந்த ஆடி பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான நேற்று மாலை
முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button