சட்டமன்ற குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு சார்பில் வேல்முருகன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது அங்கு இயங்கிவரும் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு அங்கே அரசு உறுதிமொழியில் அடிப்படையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளை பார்வையிட்டதோடு அங்க சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உறவினர்களிடத்தில் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

உடன் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன், அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தார்.
மேலும்மருத்துவமனை வளாகத்தில் ஓரிடத்தில் கழிவு நீர் குழாய் உடைந்து மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலை இருப்பதனை கண்டறிந்து அதனை உடனடியாக சரி செய்து குழுவிற்கு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.



