கவிதைகள் (All)
வானமும் வசப்படும்.
கவிதைச் சோலை
வானமும் வசப்படும்..
லட்சியங்களை வளர்த்திடு
சோம்பல் விலகி ஓடும்…
பொறாமையை விட்டிடு
மன அமைதி தழுவும்!
அறிவைப் பெருக்கிடு
கோபம் அழிந்திடும்…
பயத்தைப் பொசுக்கிடு
கனவுகள் வசப்படும்!
ஆணவத்தை விரட்டிடு
முன்னேற்றம் வந்தடையும்…
சந்தேகத்தை விலக்கிடு
நம்பிக்கை தங்கிடும்!
மன்னிக்கக் கற்றிடு
பகைமை அஞ்சிடும்…
மனிதநேயம் விரும்பிடு
சுயநலம் பறந்திடும்!
இருப்பதைப் பகிர்ந்திடு
களிப்பு நிறைந்திடும்…
சாதனைகள் புரிந்திடு
உலகமே புகழ்ந்திடும்!
துணிவைத் தழுவிடு தடைகள் தகர்ந்திடும்…
கருணைக்கு இடங்கொடு
இதயம் மலர்ந்திடும்!
சிந்திக்கப் பழகிடு
செயல்கள் செழித்திடும்…
எதிர்மறை தடுத்திடு
எதிர்காலம் ஒளிர்ந்திடும்!
தாமதம் தவிர்த்திடு
வெற்றிகள் குவிந்திடும்…
நேரத்தை மதித்திடு
வானமும் வசப்படும்!
- மு.நந்தனா, பனையபுரம், விழுப்புரம்.