ஷார்ஜா 45 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதுவை ஹிதாயத் எழுதிய ‘ஷார்ஜவின் சிற்பி – மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி’ நூல் வெளியீடு

ஷார்ஜா 45 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதுவை ஹிதாயத் எழுதிய ‘ஷார்ஜவின் சிற்பி – மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி’ நூல் வெளியீடு
ஷார்ஜா:
ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 45-வது பதிப்பையொட்டி, முதுவை ஹிதாயத் எழுதிய ஷார்ஜவின் சிற்பி – மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி’ என்ற நூல் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழா வரும் வியாழக்கிழமை, 2026 நவம்பர் 5-ஆம் தேதி, பிற்பகல் 3.30 மணி முதல் 3.55 மணி வரை ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள 7-ஆம் அரங்கில் அமைந்துள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில் (Writers Forum) நடைபெறுகிறது.
ஷார்ஜாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஆட்சியாளர் மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
ஷார்ஜா ஆட்சியாளர் குறித்து எழுதப்பட்ட முதல் தமிழ் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், சமூக தலைவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.



