வளைகுடா

துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

துபாய்

துபாய் கல்வி நகரத்தில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான
கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை பேராசிரியர் முனைவர் சித்திரை பொன் செல்வன் தலைமையில்
ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் கவிஞர் இரா.இரவி எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலினை பேராசிரியர் சாலமன் பெர்னாட்ஷா ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட முதல் பிரதியை ஆப்பிரிக்க மாணவர் அபெனா பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய பேராசிரியர் சித்திரை பொன் செல்வன்,
தமிழகத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா. இரவி தமிழில் ஹைக்கூ, புதுக்கவிதை, சமூகக் கவிதைகள் போன்ற பல்வேறு இலக்கிய வடிவங்களில் தொடர்ந்து படைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் மொழி, மனிதநேயம், சமூக விழிப்புணர்வு, இயற்கை, வாழ்க்கை அனுபவங்கள் போன்ற கருப்பொருள்களை எளிய மொழிநடையில் வெளிப்படுத்தும் தனித்துவம் அவரது கவிதைகளில் காணப்படுகிறது.
மேலும் ஹைக்கூ இலக்கிய வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்களித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் தமிழ் இலக்கியத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருவதன் மூலம் உலகத்தமிழர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து வருகிறார்.
அவரது படைப்புகளில் மனிதநேயம், சமூக அக்கறை, இயற்கை நேசம் மற்றும் தமிழ்ப்பற்று ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன.
அவரது ஹைக்கூ கவிதைகள் மிகச் சில சொற்களில் ஆழமான சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதால், ஹைக்கூ வாசகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.
இந்த விழாவில் துபாய் பிளசண்ட் டூரிசம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மாஜிதா பேகம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button