இராமநாதபுரம்

ஓஎன்ஜிசி சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஓஎன்ஜிசி சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இராமநாதபுரம், ஜூலை.10

ராமநாதபுரம் மாவட்ட ஒ என் ஜி சி மற்றும் காவேரி அசட் நிறுவனங்களின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நடை பயண பேரணி.

ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஸ்வாட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

பேரணியில் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனமான ரோட்டரி சங்கம், சிஎஸ்ஐ மற்றும் சதக் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள், கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சப்பையில் சத்துமாவு பாக்கெட்டுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார்

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மண் வளத்தை பாதுகாப்போம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு பதாகைகைகளை ஏந்திய படியே ஊர்வலமாக சென்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button