இராமநாதபுரம்
நடைரோந்து

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைரோந்து (Foot Patrol) மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . G. சந்தீஷ், திருப்புல்லாணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து நடைரோந்து மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
இந்நடைரோந்தின் மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதிசெய்ய காவல்துறை தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.





