பயணியர் நிழற்கூடை திறப்புவிழா

பயணியர் நிழற்கூடை திறப்புவிழா

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளுந்துரை கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி எம்பி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணை தலைவர் வேலுச்சாமி, கொளுந்துரை கேசவன், இ.யூ.மு.லீக் மாநில துணை செயலாளர் பி.எம்.அப்துல் ஜப்பார், மாவட்ட பொருளாளர் முகம்மது யூனுஸ் ஆலிம், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சாதுல்லாகான், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கீழை என்.நெய்னா முஹம்மது, முதுகுளத்தூர் ஒன்றிய அமைப்பாளர் புருகானுதீன், எஸ்.டி.யூ மாவட்ட செயலாளர் பைரோஸ்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எம்.சுல்தான் சலாவுதீன், இராமநாதபுரம் நகர தலைவர் வி.முகம்மது காசிம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




