இஸ்லாமியப் பார்வையில் அம்பேத்கர்” நூல் வழங்கல்

இஸ்லாமியப் பார்வையில் அம்பேத்கர்” நூல் வழங்கல்
விசிக மாநில செயலாளர் அஹ்மத் சாஹிப் நூலை வழங்கினார்

சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதி சிந்தனையும் முன்னெடுக்கும் வகையில் நூல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்புரை மாநில செயலாளர் திரு. அஹ்மத் சாஹிப் அவர்கள், விசிக *சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் திரு. முஹம்மத் இஸ்மாயில் அவர்களை சந்தித்து “இஸ்லாமியப் பார்வையில் அம்பேத்கர்” என்னும் நூலை வழங்கினார்.
இந்த சந்திப்பில் பாபாசாகேப் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகள், சாதி ஒழிப்பு கருத்துகள் மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கும் தலித் சமூகத்திற்குமான ஒற்றுமையின் அவசியம் குறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் இத்தகைய கருத்தியல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என இருவரும் வலியுறுத்தினர்.





