இராமநாதபுரம்

திருவாடானை அருகே மணல் மாஃபியா’: அதிகாரிகளை அதிரவைத்த பகல் நேரத் துணிச்சல்! – தாசில்தாரின் மின்னல் நடவடிக்கை!

திருவாடானை அருகே மணல் மாஃபியா’: அதிகாரிகளை அதிரவைத்த பகல் நேரத் துணிச்சல்! – தாசில்தாரின் மின்னல் நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மணல் திருட்டு, அப்பகுதி மக்களையும் அதிகாரிகளையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​ பாண்டுகுடி அருகே மங்கலம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முதன்மைச் சாலைப் பகுதியில், சுமார் 4 யூனிட் ஆற்று மணல் பகலிலேயே திருடப்பட்டுத் துணிச்சலாகக் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் கண்மாயில் மடை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஒப்பந்தக்காரர்தான் இந்தத் திருட்டு மணலை வாங்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஒப்பந்தக்காரர் முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

​ இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட திருவாடானை தாசில்தார் திரு. தாமஸ் யூரிக்ககாரின், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் தலையாரியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
​அங்கே சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருந்த 4 யூனிட் ஆற்று மணலையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைத் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்திற்கு அள்ளிச் சென்று பாதுகாப்பாகக் கூட்டி வைத்தனர்.

​இதுகுறித்துத் தகவலளித்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட மணல் தொடர்பாகக் , கனிம வளத்துறை மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும், பட்டப்பகலிலேயே மணல் கடத்தலில் ஈடுபட்ட ‘மணல் மாஃபியாக்கள்’ மீது காவல்துறையினர் எவ்வித தயவுதாட்சணியுமின்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button