இராமநாதபுரம்

இயற்கை விவசாயிகளுக்கான. வேளாண் விளை பொருட்கள் விற்பனை நிலையத்தை அமைச்சர் டாக்டர் V.K.ராஜீவ் தொடங்கி வைத்தார்

இயற்கை விவசாயிகளுக்கான. வேளாண் விளை பொருட்கள் விற்பனை நிலையத்தை அமைச்சர் டாக்டர் V.K.ராஜீவ் தொடங்கி வைத்தார்

​ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம்
​ராமநாதபுரம் நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறையின்சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் விளை பொருட்கள் விற்பனை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் (01.11-26) விற்பனையை தொடங்கிவைத்து பார்வையிட்டார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா. சிவாகுரு பிரபாகரன் உடனிருந்தார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த இயற்கைகாய்கறிகள்பழங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து உரிய விலை பெற முடியும். நுகர்வோருக்கும் தரமான இயற்கை உணவுப் பொருட்கள் நியாயமானவிலையில் கிடைக்கும். என அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கழிப்பறைகளின் தூய்மை மற்றும் கடைகளை பார்வையிட்ட அவர், பேருந்து நிலைய வளாகத்தை முறையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button