கீழக்கரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

கீழக்கரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.வருங்கால ஆளுநர் ரொட்டேரியன் எபினேஷ் பென்சம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சங்கத்தின் புதிய தலைவராக ரொட்டேரியன் பொறியாளர் சித்திரவேலு, செயலாளராக ரொட்டேரியன் சபீர்க் மற்றும் பொருளாளராக ரொட்டேரியன் பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள்:
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இராமநாதபுரம் ராஜன் மருத்துவமனை நிறுவனர் ரொட்டேரியன் ஜோசப் ராஜன், ராம்நாடு ரோட்டரி கிளப் முன்னாள் துணை ஆளுநர் ரொட்டேரியன் ஷண்முகராஜேஸ்வரன், இந்த ஆண்டுக்கான துணை ஆளுநர் ரொட்டேரியன் சுல்தான் சம்சுல் கபீர் மற்றும் முன்னாள் துணை ஆளுநர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் பட்டயத் தலைவர் ரொட்டேரியன் அலாவுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் தலைவர் ரொட்டேரியன் சிவகார்த்திக் மற்றும் முன்னாள் செயலாளர் ரொட்டேரியன் அந்தோணி சதீஸ் ஆகியோர் கடந்த ஆண்டு நிகழ்வுகளை சமர்ப்பித்து ஆண்டறிக்கை வாசித்தனர்.விழாவில் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.நிறைவாக, புதிதாக பொறுப்பேற்ற செயலாளர் ரொட்டேரியன் ஹாஜி சபீர்க் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.




