இராமநாதபுரம்

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு தவெக நகர் செயலாளர் வருகை – பொன்னாடை அணிவித்து வரவேற்பு

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு தவெக நகர் செயலாளர் வருகை – பொன்னாடை அணிவித்து வரவேற்பு

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகம் – தவெக நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் மற்றும் கட்சி நிர்வாகிகள் முபித், ஷாலோம் சரத்
நகர் துணை செயலாளர் ஆயிஷா ஆகியோர் வருகை தந்தனர்.

வருகை தந்தவர்களை கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் சார்பில் செயல் தலைவர் முஹம்மது அஜிஹர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது ஊர் நலன் மற்றும் பகுதி வளர்ச்சி குறித்து நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் கருத்து தெரிவித்தார்.

“கீழக்கரை நகரின் அடிப்படை வசதிகள் மேம்பட, குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தவெக சார்பில் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும். மக்களின் நலன் ஒன்றே எங்களின் நோக்கம். பொதுமக்கள் கூட்டமைப்புடன் இணைந்து ஊர் வளர்ச்சி பணிகளை முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், பகுதி மக்களின் நலன் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில்
கூட்டமைப்பு செயலாளர் சர்பராஸ் நவாஸ், பொருளாளர் முகமதுபரூஸ், செயற்குழு உறுப்பினர்கள் சுபைர், நைனார் முஹம்மது, சபீர், சேகுசதக், சுல்தான், சட்ட ஆலோசகர் எஸ்.ஏ.எஸ். அலாவுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button