கட்டுரைகள்

நம்ம செங்கோட்டை பொண்ணு நிகர் ஷாஜி!

நம்ம செங்கோட்டை பொண்ணு நிகர் ஷாஜி!

வறுமை, பொம்பளப்புள்ள என்ன படிச்சு கிழிக்கப் போகுதுன்னு சொன்ன அடக்குமுறை எல்லாத்தையும் தாண்டி, நேரா சூரியனையே போய் தொட்டுட்டாங்க!

யாருன்னு தெரியுமா? நம்ம இந்தியாவோட முதல் சூரிய விண்கலம் Aditya-L1-வோட Project Director அவங்க தான்!

நம்ம செங்கோட்டை SRM அரசு பள்ளியில படிச்ச புள்ள, அப்புறம் திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் காலேஜ், அப்புறம் BIT Mesra-வுல படிச்சு பெரிய ஆளாகி இருக்காங்க.

1987-லயே ISRO-ல சேர்ந்து, 8 வருஷமா போராடி, 2023-ல நம்ம Aditya-L1-ஐ விண்ணுல ஏத்தி சாதிச்சிட்டாங்க!

அவங்க சொல்ற ஒரு வார்த்தை தான் நம்ம புள்ளைங்களுக்கு பாடம்…

“ISRO-வுல ஆம்பள, பொம்பளன்னு பாகுபாடே இல்ல. திறமை இருந்தா போதும்!”

அரசு பள்ளியில படிச்ச சாதாரண பொண்ணால கூட சூரியனை ஆராய முடியும்னு நிரூபிச்சிட்டாங்க!

பசங்களா… வானத்தை, சூரியனை தொடனுமா? மொபைலை தூக்கி வீசுங்க, புக்கை கையில எடுங்க சாதிக்கலாம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button