டாக்டர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு இரங்கல் கவி !
டாக்டர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு இரங்கல் கவி !
முத்தமிழ் மன்றம் கண்ட மாமதுரை முத்ததமிழே! மாண்புநிறை வளர்தமிழ் போற்றும் பேரறிவே!
வழக்காடு சொல்லரங்க
மேடை சுடொளியே! சொற்களில் சளைக்காத அருமைத் தேன் சுவையே!
பட்டிமன்றக் கலைக்ககு வடிவம் கொடுத்த சொல்லரசே!
பட்டித் தொட்டிகள் எங்கும் தமிழ்த் தொண்டு ஆற்றியவரே!
தமிழகத்தின் தமிழ் பற்றாளரின் நெஞ்சங்கள் ஆழ்ந்த துயரம்!
எங்கும் பார்க்கின் வாடிய முகங்கள் கவலைத் தோய்ந்து!
உன்னைப் பார்க்க ஏக்கம் நிறைந்து நின்றிருக்கே!
கலகலப்பாய் தமிழ்பேசிச் சிரித்த முகம் எங்கென்றே மக்கள் வாடியுள்ளார்!
மங்கா உந்தன் குரலொலியும் மண்ணுலகை விட்டல்லவா மறைந்தது.
புன்னகைப்பும் அறிவொளியும் பட்டிமன்ற ஆசனம் சிறந்து விளங்கியது!
நெறிதவரா நல்ல தீர்ப்புரைத்து நேர்மை காட்டிய விதமே தனியழகு!
புன்னகையால் வாதங்களை வென்று இருதரப்பும் தீர்ப்பை ஏற்கும்!
பட்டைத் தீட்டிய பண்பால் நல்ல பழக்கத்தால் உயர்வு கண்டவரே!
உன்னைப் பிரிந்து தமிழுலகு கண்கள் நீர் தோய்ந்து சோகமுடன் அழுகிறது!
இலக்கியத் தமிழாம் புறநானூற்றுப் பாடல் திருக்குறள் பாரதிப் பாடல் வரிகள்!
செந்தமிழால் உன் புதுக்கவிதை வடிவங்களை எமக்கு தந்தது!
திறமோடு நீயளித்த தீர்ப்புகள் பட்டிமன்றமே கலை கட்டும்!
காலங்கள் மாறினாலும் உன் திருப்பெயர் என்றும் நிலைத்திருக்கும்!
வாயுரைத்த நற்றமிழும் நல் கருத்தும் செவியில் ஒலித்திருக்கும்!
அமைதி கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் நீயுறைந்த போதும் உலகத் தமிழர்கள்!
நெஞ்சினில் நீங்கா இடத்தில் நீயிருப்பாய் ஐயா!
தமிழ்த்தாய் தவப்புதல்வரே! பேராசிரியர் ஐயா சாலமன் பாப்பையா அவர்களே!
உமக்கு எமது கண்ணீர் அஞ்சலியை சொற்கவியில் உரித்தாக்குறேன்.
— கவிஞர் கொடிநகரான்.