துபாயில் குடும்ப நிலைத்தன்மை பயிலரங்கம்

துபாயில் குடும்ப நிலைத்தன்மை பயிலரங்கம்

துபாய் :
துபாய் கலாச்சாரத்துறையின் சார்பில் கிரீன் குளோப் அமைப்பின் ஒத்துழைப்பில், சுற்றுசூழல் ஆர்வலர் அப்துல் காதர் சீறிய முன்னெடுப்பில் Generation Shaper (தலைமுறை உருவாக்கம் ) குடும்ப நிலைத்தன்மை பயிலரங்கம் ( Family Sustainablity workshop) நிகழ்ச்சி ஹோர் அல் அன்ஸ் நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது
“சமையலறைக் கழிவுகளிலிருந்து உயிருள்ள மண்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், வீட்டில் உருவாகும் சமையலறைக் கழிவுகளை பயனுள்ள இயற்கை உரமாக மாற்றுவது, மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு குடும்பத்தினரின் பங்களிப்பின் அவசியம் குறித்து நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பொதுமக்களுடன் பள்ளிக்கூட மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அப்துல் காதர் , வீட்டிலேயே இயற்கையான முறையில் சமையலறைக் கழிவுகளைப் பயன்படுத்தி மண் உரத்தை உருவாக்கும் பல்வேறு வழிமுறைகளை செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார். இயற்கை பாதுகாப்பு, பசுமை விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்தும் பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
துபாய் மாநகராட்சியை சேர்ந்த பெண் அதிகாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீட்டில் பாதுகாப்பாக செடிகள் வளர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி, பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மர கன்றுகள் வழங்கினார்.
நிகழ்வினை கிரீன் குளோப் உறுப்பினர்கள் ரஸூல், அப்துல் ரஹ்மான், தாஹிர், பீர் முஹம்மது மற்றும் பல்வேறு தன்னார்வலர்களும் ஒருங்கிணைத்தனர்.
இறுதியில் நிகழ்வு சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.





