வளைகுடா

துபாயில் ஆட்டிசம் தினத்தையொட்டிசிறப்பு நிகழ்ச்சி

துபாயில் ஆட்டிசம் தினத்தையொட்டி
சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் ஆட்டிசம் தினத்தையொட்டி
சிறப்பு நிகழ்ச்சி

துபாய் :
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பாக ஆட்டிசம் எனப்படும் “உலக மன இறுக்க நோய் (Autism)தினத்தை முன்னிட்டு, ஏப்ரல் 3, 2026 துபாயில் உள்ள ஒரு சிறப்பு பள்ளிக்கூடத்தில் மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக வினாடி வினா, பொழுது போக்கு வேடிக்கைகள், மன இறுக்க நோய் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் கைகளால் வண்ணம் தீட்டும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டன.
மேலும் அந்த குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகாரணங்கள் கிரீன் குளோப் சார்பாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார். மேலும் கிரீன் குளோப் உறுப்பினர் பீமா உறுதுணையாக இருந்தார்.
பல்கலைகழக மாணவிகள் சுருதி மற்றும் ராஜி தன்னார்வலர்களாக கலந்துகொண்டு அறிவு திறனை மேம்படுத்தும் காணொளி மற்றும் வினாக்கள் குழந்தை களுக்கு தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்விற்கு அப்பள்ளியின் மருத்துவர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button