முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக, மன்பவுல் ஹசனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக, மன்பவுல் ஹசனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா 12/09/2026 அன்று ஹிம்மத்துல் இஸ்லாம் பெண்கள் நிஸ்வான் மஜ்லிஸில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஜமாத் தலைவர் காதர் முகைதீன் அவர்கள் தலைமை ஏற்க, பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி ஷவ்கத் அலி ஆலிம் கிராஅத் பயில, சங்கத்தின் செயலாளர் அகமது கபீர் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பஷீர் சேட் ஆலிம் அவர்கள் அறிமுக உரையாற்ற, தேரிருவேலி சுன்னத் ஜமாத் தலைமை இமாம் J.S.S அலி பாதுஷா மற்றும் S.அக்பர் பாதுஷா, பன்னூல் ஆசிரியர் பரமக்குடி அவர்களும் வாழ்த்துரை வழங்க, குத்துச்சண்டையில் மாநில அளவில் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் லத்திகா கரன், செல்வகணேஷ் , யுவதில்லை ராஜன் மற்றும் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்சாரி ஆகியோருக்கு ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது,
மேலும் ஆலிமா, மற்றும் தீன் யாத், வகுப்புகளில், சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கோடைகால மார்க்க கல்வி பயின்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது, இவ்விழாவில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், பள்ளிவாசல் பள்ளி கல்வி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஹிம்மத்துல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் ஜமாத் தலைவர்கள், ஆகியோர் முன்னிலை வகிக்க, சங்கத்தின் ஆடிட்டர் அப்துல்லா அவர்கள் நன்றி வுரையாற்ற, பெரிய பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஹீம் அவர்களின் துவாவுடன் இனிதாக நிறைவுற்றது.













