இராமநாதபுரம்

யாகசாலை பூஜைகளுடன் பசும்பொன் தேவர் குருபூஜை விழா தொடக்கம்

யாகசாலை பூஜைகளுடன் பசும்பொன் தேவர் குருபூஜை விழா தொடக்கம்

கமுதி,
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் 119வது ஜெயந்தி விழாவும் 64 வது குருபூஜை விழாவும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 28 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஓதுவார்களின் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, லட்சார்ச்சனை பெருவிழாவுடன் குருபூஜை விழா தொடங்குகிறது. இதில் நினைவளைய பொறுப்பாளர் காந்தி மீனாள் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரை டாக்டர் சரவணன் கலந்து கொண்டார்கள் மேலும் காலை 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெறுகிறது. விழாவிற்கு வரும் பொது மக்களுக்கு அரசியல் கட்சி மற்றும் சமுதாய அமைப்பினர் சார்பில் மிகப்பெரிய அளவில் அன்னதான கூடங்கள் அமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் ஜேசாப் விஜய் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.உதய நிதி ஸ்டாலின் மற்றும் கே.பழனிச்சாமி தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி, சமுதாய அமைப்பினர், விவசாயிகள் சங்கங்கள் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். தமிழக காவல்துறை ஜஜி விஜயேந்திர பிராரி தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button