இந்தியாஉலகம்வளைகுடா

மதினாவில் முஸ்னத் அஹமது நூல் வெளியீட்டு விழா

மதினாவில் முஸ்னத் அஹமது நூல் வெளியீட்டு விழா

மதினா :

சவூதி அரேபியா மதினமா நகரத்தில் இஸ்லாமிக் யுனிவர்சிட்டி மதீனாவில் உள்ள பிரசித்தி பெற்ற

அல் சலாம் என்ற அரங்கத்தில் தமிழகத்தின் சென்னை ஆலிம் ப்ப்ளிகேஸன் பவுண்டேஸன் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட முஸ்னத் அஹமது என்ற ஹதீது கிரந்தத்தின் பாகம் எட்டு வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதில் சவூதி அரேபியாவின் முக்கிய மார்க்க அறிஞர்கள் கல்வியாளர்கள் பிரமுகர்கள் என்று பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அந்த மொழிபெயர்ப்பு நூல் மதீனா யுனிவர்சிட்டியின் நூலகத்திலும் இடம்பெறச் செய்தனர். அந்த நூலகத்தில் இடம்பெறச் செய்த முதல் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் என்ற கூடுதல் சிறப்பையும் இந்த நூல் பெற்றது ஒரு சிறப்பு அம்சம்.

அந்த நூலின் பிரதி ஒன்றை மஸ்ஜிதே நபவி மதீனா முனவ்வராவின் தலைமை முஹத்தீன் அல் இயாது அஹமது சுக்ரியா அவர்களிடம் ஆலீம் ப்ப்ளிகேஸன் பவுன்டேஸன் முக்கிய நிர்வாகிகள் புரபஸனல் கொரியர் அஹமது மீரான், அண்ணாநகர் மஸ்ஜித் ஜாவித் பள்ளிவாசலின் தலைவர் முஹம்மது யூசுப் மற்றும் ஜிப்ரிகாஸிம் ஆகியோர் வழங்கி வாழ்த்து பெற்றார்கள்.

தலைமை முஹத்தீன் அவர்கள் இதனை சதகத்துல் ஜாரியா என்பதாக குறிப்பிட்டு முஸ்னத் அஹ்மத் சிறு பிராந்திய மொழிகளில் கூட மொழிபெயர்க்கப் படுவதை அறிந்து தனது மகிழ்ச்சியை நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார். மற்றைய பாகங்களும் கூடிய விரைவில் வெளிவர தான் துஆ செய்வதாகவும் கூறினார்

அவரை சந்தித்ததில் தங்கள் மகிழ்ச்சியை நிர்வாகிகளும் பரிமாறிக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button