கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது,ஜூலை 30,31 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்த முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலும் கீழக்கரை வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் முன்னிலையிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய ஆவணங்கள் சரிபார்கப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டன.வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதாக பெறும் வகையில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் இலவச உதவி மையம் அமைத்து பொதுமக்களில் தேவைகளை எளிதாக்கினர்,பொதுமக்கள் கூட்டமைப்பின் செயலாளர் சர்பராஸ் நவாஸ், செயல் தலைவர் முஹம்மது அஜிஹர், பொருளாளர் முகமதுபரூஸ், செயற்குழு உறுப்பினர்கள் சபீர், சேகுசதக், சுல்தான், சட்ட ஆலோசகர் எஸ்.ஏ.எஸ்அலாவுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்,மேலும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.




