அடையாளம் தெரியாத சடலம் மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தங்கம்மாள் ரஹிம் அறக்கட்டளையினர்

அடையாளம் தெரியாத சடலம் மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தங்கம்மாள் ரஹிம் அறக்கட்டளையினர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதியதில் 48 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ விவரம்:
அடுத்தடுத்து வந்த வாகனங்கள் உடலில் ஏறி இறங்கியதில் முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் உடல் கைப்பற்றப்பட்டது.
பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இறந்தவரை அடையாளம் காண முடியாததால் பரமக்குடி தாலுகா காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டதின் பேரில் எமனேஸ்வரம் தங்கம்மாள் ரஹிம் அறக்கட்டளை நிறுவனர் முகனவர் முன்வந்தனர்.
மனித நேய சேவை:
அறக்கட்டளை நிர்வாகிகள் உடலை பெற்று, முகமது அலி ஜின்னா தலைமையில் மஞ்சள் பட்டினம் மயானத்தில் முறையாக அடக்கம் செய்தனர்.
இறுதி சடங்கின் போது மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பரமக்குடி நகர் தாலுகா தலைமை காவலர்கள் பாலகுரு, பாண்டி ஆகியோரும் உடனிருந்தனர்.
உடனிருந்தவர்கள்:
சட்டகளம் இணை ஆசிரியர் குபின் இப்ராஹிம்ஷா, தங்கம்மாள் ரஹிம் ரத்ததான குழும ஒருங்கிணைப்பாளர் முகமது யூசுப் ஆகியோர் உடனிருந்தனர்.
அடையாளம் தெரியாத உடலுக்கும் மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்த அறக்கட்டளையினரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.




