இராமநாதபுரம்

ஏர்வாடி தர்காவில் பனை ஓலை பெட்டியில் 18,000 கிலோ நெய் சோறு

ஏர்வாடி தர்காவில் பனை ஓலை பெட்டியில் 18,000 கிலோ நெய் சோறு

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்கா கொடியிறக்கத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இன்று(மே 28) 18 ஆயிரம் கிலோ அரிசியில் நெய் சோறு பனை ஓலை பெட்டியில் வழங்கப்படுகிறது.

தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஏப்., 29 ல் மவுலிது எனப்படும் புகழ் மாலையுடன் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்பட்டு வந்தது. மே 21 இரவு துவங்கி மறுநாள் மே 22 வரை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது.

இன்று (மே 28) கொடி இறக்கம் செய்யப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் எனப்படும் நெய்ச்சோறு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் கூறியதாவது: ஏர்வாடி தர்கா கொடி இறக்கம் செய்யப்படும் நாளில் காலை முதல் மதியம் வரை இரண்டு இடங்களிலும், மாலை முதல் இரவு வரை தர்கா மேற்கு வாயில் பகுதியிலும் நெய் சோறு அன்னதானமாக வழங்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button