இராமநாதபுரம்

டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்

டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்

மத்திய கல்வி அமைச்சர் உருவப்படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகளை இழுத்து சென்ற போலீசாருடன் வாக்குவாதம்

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரண்மனை முன்பு நகர் தலைவர் கோபி தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பு உறுப்பினர்கள் ரமேஸ்பாபு, சரவணகாந்தி இளைஞர் காங்கிரஸ் நேரு, பொன் பெரியார், வக்கீல் அன்பு செழியன், வட்டார தலைவர் கார்குடி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவானதை கண்டித்தும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்துறை அமைச்சர் பிரதமர் ஆகியோர் பதவி விலகக் கோரியும் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்ததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது

இந்த போராட்டத்தின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை போலீசார் இழுத்துச் சென்று வெளியேற்றினர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button