கீழக்கரை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு

கீழக்கரை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு

கீழக்கரை ஜன,13
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் பெயரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை குழந்தைகள் உதவி மையம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த ராஜ்,மேற்பார்வையாளர் பிரகதி மற்றும் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் கண்ணகி ஆகியோர் பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார், இந்நிகழ்வில் மகளிர் காவல் நிலைய காவலர்கள் ஸ்ரீமதி, முத்து மாரியம்மாள், உடன் இருந்தனர்,
குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் பேசுகையில் குழந்தைகள் பாதுகாப்பு என்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, சுரண்டல், தீங்கிழைத்தல் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து குழந்தைகள் ஆரோக்கியமாக உயிர் வாழ மற்றும் உடல், மன வளர்ச்சி பெற்று தனித்தன்மையுடன் வளர பாதுகாக்கப்படுவது குழந்தை பாதுகாப்பு ஆகும் சிறார் உதவி மைய எண் 1098, ஒருவர் இந்த எண்ணை தொடர்புகொண்டு உதவி கேட்கலாம் அல்லது உதவி தேவைப்படும் குழந்தைகளை கண்டால் தெரிவிக்கலாம் என்று கூறினார்,கீழக்கரை மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கண்ணகி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டத்தினை பற்றி விரிவாக மாணவர் மத்தியில் உரையாற்றினார்,





