இராமநாதபுரம்
டால்பின்கள் துள்ளி குதித்து விளையாடும் காட்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளில் டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து விளையாடின. இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்தியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அரிய காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிககையிலான டால்பின்கள் ஒரே நேரத்தில் கடலோரப் பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்றனர்.




