இராமநாதபுரம்
இராமநாதபுரம், தொண்டி: தடைசெய்யப்பட்ட புகையிலை பதுக்கல் – 2 சப்ளையர்கள் கைது

இராமநாதபுரம், தொண்டி: தடைசெய்யப்பட்ட புகையிலை பதுக்கல் – 2 சப்ளையர்கள் கைது

இராமநாதபுரம் மற்றும் தொண்டி பகுதிகளில் வீடுகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பதுக்கி வைத்திருந்த சப்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
இராமநாதபுரம் வெளிப்பட்டணம் கேணிக்கரை போலீசார் ரோந்தின் போது மீன்காரத் தெருவை சேர்ந்த அல் ஆதிம் (22) என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவரது வீட்டில் 15 கிலோ எடையுள்ள 3 மூடைகளில் 1368 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், தலைமறைவாக உள்ள உறவினர் அம்ஜத் பெங்களூரில் இருந்து புகையிலையை மொத்தமாக வாங்கி வந்ததும், மாவட்டம் முழுவதும் சப்ளை செய்ததும் தெரியவந்தது.




