இராமநாதபுரம்
மாவட்ட ஆளுமைக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு ,மாவட்ட ஆளுமைக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைவில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி ,திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் நகர் மன்ற தலைவர், துணை தலைவர்கள் திமுக கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





