இராமநாதபுரம்

கீழக்கரை டுவின்ஸ் ஆம்புலன்ஸ் நண்பர்கள் சங்கத்தின் சார்பில் இரத்ததான முகாம்

கீழக்கரை டுவின்ஸ் ஆம்புலன்ஸ் நண்பர்கள் சங்கத்தின் சார்பில் இரத்ததான முகாம்

கீழக்கரை ஜன,27
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரையில் டுவின்ஸ் ஆம்புலன்ஸ் நண்பர்கள் சங்கமும், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் , இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்.கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமிற்கு டுவின்ஸ் ஆம்புலன்ஸ் நண்பர்கள் சங்கத் தலைவர் நஸ்ருதீன் தலைமை தாங்கினார்.இரத்ததான முகாமை காவல் ஆய்வாளர் பத்மநாபன் துவக்கி வைத்தார்கள், இந்த நிகழ்ச்சியில் 800மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டு 58 நபர்கள் இரத்த தானம் செய்தனர். இரத்ததானம் செய்த அனைவருக்கும் டுவின்ஸ் ஆம்புலன்ஸ் சார்பாக விருது வழங்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளர்களாக கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் , தமிழக முஸ்லிம் ஜமாத் மாநிலத் தலைவர் முத்து ரகுமான்,
கீழக்கரை அரசு மருத்துவர் டாக்டர் அமீர்கான், ரெசிடென்சி பஷீர் தீன், முகைதீன்யா ஸ்கூல் தலைமை ஆசிரியர் அஸ்வத் இப்ராஹிம் உம்மா , பெஸ்ட் கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியர் நசிர் கான்,, ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக டுவின்ஸ் ஆம்புலன்ஸ் நண்பர்கள் சங்கத்துடைய பொருளாளர் அசாருதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button