தமிழ்நாடு
நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

இஸ்லாமிய இலக்கியக் கழகமும் சென்னை புதுக் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து நடத்திய நூற்றாண்டு கண்ட ஆளுமைகள் என்ற தலைப்பில் 13-8-26 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிப் அவர்கள் குறித்து உரையாற்றினேன்.

சகோதரர் தேரிழந்தூர் தாஜுதீன் இசை முரசு நாகூர் ஹனிபாவின் பல புகழ் பெற்ற பாடல்களைப் பாடினார். அவரது இசைப் பெருமழையில் குடைபிடிக்காமல் நனைந்து மகிழ்ந்தோம் நல்ல நிகழ்ச்சி மன நிறைவான நிகழ்ச்சி!
இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் சே. மு மு அவர்களுக்கும் பொதுச்செயலாளர் மரைக்காயர் அவர்களுக்கும் கல்லூரியின் தமிழ்த். துறைத் தலைவர் பேரா செய்யிது அபூதாகிர் அவர்களுக்கும் நன்றி சேயன் இப்ராகிம்






