ஹிம்மத்தூல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் ஹிம்மத்தூல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 26/09/2026 மஃக்ரிப்பில் இருந்தா இஷா வரை மிக சிறப்பாக நடைபெற்றது, பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத் தலைவர் காதர் நைனார் கனி தலைமையில், பெரிய பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஹீம் ஆலிம் கிராத்து ஓதி ஆரம்பித்து வைக்க ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க செயலாளர் அகமது கபீர் வரவேற்பு உரையாற்ற, முதுவை உலமா மஜ்லிஸ் உலமாக்கள் சிறப்புரையாற்ற, ஹிம்மத்தில் இஸ்லாம் வாலிபர் சங்கம், கணக்கர் அகமது இப்ராஹிம் நன்றி உரையாற்ற , முகைதீன் பள்ளிவாசல் இமாம் இப்ராஹிம் ஆலிம் துவா ஓதி மார்க்க ( தெருமுனை பிரச்சாரம்) விளக்க கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது,
விழா ஏற்பாடுகளை ஹிம்மத்துல இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கிணைக்க தெருமுனைப் பிரச்சாரம் இனிதே நிறைவுற்றது.






