வளைகுடா

ஷார்ஜா 45வது சர்வதேச புத்தக கண்காட்சியில் முதுவை ஹிதாயத் எழுதிய ஷேக் சுல்தான் குறித்த முதல் தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 45வது சர்வதேச புத்தக கண்காட்சியில் முதுவை ஹிதாயத் எழுதிய ஷேக் சுல்தான் குறித்த முதல் தமிழ் நூல் வெளியீடு

தொழிலதிபர் செய்யது எம் ஸலாஹுதீன் வெளியிட நவாஸ்கனி எம்.பி. முதல் பிரதியை பெற்று கொண்டார்

ஷார்ஜா :

ஷார்ஜா 45வது சர்வதேச புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 7 ல் எழுத்தாளர் பேரவை அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் முதுவை ஹிதாயத் எழுதிய ‘ஷார்ஜவின் சிற்பி – மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி’ குறித்த முதல் தமிழ் நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்புடன் நடந்தது.

தொடக்கமாக இறை வசனங்கள் ஓதப்பட்டது.

இஸ்லாமிய இலக்கியக் கழக ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ முஹம்மது மஹ்ரூப் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நூல் அறிமுக உரையை கல்லிடை முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நிகழ்த்தினார்.

இந்த நூலை எஸ்.என்.ஜி. குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் செய்யது எம் ஸலாஹுதீன் வெளியிட தமிழக வக்ப் வாரிய தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி எம்.பி. முதல் பிரதியை பெற்று கொண்டார்

அதனை தொடர்ந்து முஸ்லீம் லீக் மாநில செயலாளர் எல்.கே .எஸ். மீரான் முகைதீன், தமிழக காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, தமிழக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மொய்னுதீன் ஹஜ்ரத், அலைடு மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கீழக்கரை ஏ.ஜே. கமால், தொழிலதிபர்கள் நூருல் ஹக், ஆரிப் ரஹ்மான், ரேடியன்ட் ஸ்டார் குழுமத்தின் ஆபித் ஜுனைத் , ஆட்டோ விஷன் உரிமையாளர் பைரோஸ், ஆலியா குழுமத்தின் நாகூர் ஷேக் தாவூது, அதீப் குழுமத்தின் டாக்டர் அன்சாரி, பவர் குழுமத்தின் டாக்டர் ஜாஹிர் ஹுசைன், அல் நஜ்மா அல் பரிதா குழுமத்தின் டாக்டர் அபுல் கலாம் ஆசாத், இளையான்குடி அபுதாஹிர், கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் உள்ளிட்டோர் நூல்களை பெற்று கொண்டனர்.

துபாய் கர்டின் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சித்திரை பொன்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவை அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார். விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button