அய்மான் சங்கம் நடத்திய மீலாது நபி விழா நிகழ்ச்சி
அய்மான் சங்கம் நடத்திய மீலாது நபி விழா நிகழ்ச்சி
அபுதாபி :
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா நிகழ்ச்சி கிராண்ட் நல்லாஸ் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்ச்சியில் அய்மான் சங்கதின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கமாக லால்பேட்டை ரஷீத் அஹமது ஜமாலி அவர்கள் இறை வசனம் ஓதி ஆரம்பம் செய்தார்கள்
துபாய் டிவைன் பிளாக் மஜ்லீஸ் நிறுவனர் கீழக்கரை முனைவர் மஹ்ருப் காக்கா துவக்க உரை வழங்கினார்
சங்கதின் மார்க்கத்துறை செயலாளர் மௌலானா மௌலவி S. M. B ஹுசைன் மக்கி மஹழரி வரவேற்புரை மற்றும் சிறப்புரை ஆற்றினார்
சிறப்பு விருந்தினர்கள் அபுதாபி நோபல் மரைன் குழுமத்தின் தலைவர் சாகுல் ஹமீது ஹாஜியார் , அபுதாபி அதிப் குழுமத்தின் நிறுவனர் முனைவர் அன்சாரி வாகித் சிறப்புரை வழங்கினர்.
சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.
சங்கத்தின் துணைத் தலைவர் காதர் மீரான் பைஜி அவர்கள் நன்றி உரை வழங்கினார்.
இறுதியில் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது
நிகழ்வில் அபுதாபி லால்பேட்டை ஜமாத், அபுதாபி அதிராம்பட்டினம் ஜமாத், அபுதாபி காயல் நல மன்றம், அபுதாபி மவுலுது கமிட்டி நிர்வாகிகள், மற்றும் அபுதாபி வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.




