வளைகுடா

துபாயில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி ரத்ததான முகாம்

துபாயில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி ரத்ததான முகாம்

துபாய் :
துபாய் சமூக சேவை அமைப்பான கிரீன் குளோப் சார்பாக இந்த வருடத்தின் 4 வது இரத்த தான முகாம் சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி துபாய் ஜபல் அலி பகுதியில் 01.05.2026 வெள்ளிக்கிழமை (பிற்பகல் 2 மணியளவில்) துபாய் GCC குழும நிறுவனத்தின் ஒத்துழைப்போடு நடந்தது.
இந்த முகாமுக்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை வகித்தார்.
நிகச்சியில் GCC நிறுவன HSE பிரிவின் தலைவர் பார்த்தசாரதி, உதயகுமார், பிஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் தனியார் நிறுவன மேலாளர் மாணவளான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்கள் ரசூல், தாஹிர், கலீபா, ஜீப்ரில், சாபீர், ஜன்னத், சாய்ரா மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.
GCC நிறுவன பணியாளர்கள் மற்றும் பலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்தனர். ரத்ததானம் செய்த கொடையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பழங்கள், பழச்சாறு வழங்கப்பட்டது. மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button