இராமநாதபுரம்
குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு அருகில் பாரனுர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் குடிநீர் வாழ்வு பழுதாகி பல மாதங்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருவதாகவும் இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து ஊராட்சி செயலாளர் முதல் பி.டி.ஓ. வரை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இது நாள் வரையிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை குடிநீர் வீணாகி வருவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் உடனடியாக குடிதண்ணீர் வீணாவதை சரி செய்து சீரான குடிநீர் வினியோகம் செய்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

ஏ.எம்.அயூப் கான்.மாவட்ட செய்தியாளர் ராமநாதபுரம்




