இராமநாதபுரம்

தேவிபட்டினத்தில் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

தேவிபட்டினத்தில் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சமூக சேவா சங்கம் மற்றும் சென்னை EDU SERVE FOUNDATION TRUST இணைந்து நடத்திய அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி தேவிபட்டினத்தில் நடைபெற்றது. தேவிபட்டினம் ஐக்கிய சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாக சபையின் செயலாளர் ஹாஜி பாவா முஹைதீன் தலைமை வகித்தார்கள் . தேவிபட்டினம் பெரிய பள்ளிவாசல் சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாக சபையின் செயலாளர் ஹாஜி.சித்திக் அவர்கள் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண்துறை துணை இயக்குனர் (ஓய்வு) சேக் அப்துல்லா , இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை JDO யாசர் அரஃபாத் , சென்னை EDU SERVE FOUNDATION TRUST செயலாளர் அப்துல் ரஷீத் , இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் முகமது அப்துல்லா , கல்வி ஆலோசகர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு அரசு வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் , அதற்காக மாணவர்கள் எவ்வாறு தயாராகுவது , போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர் . இந்நிகழ்வில் மாணவ , மாணவிகள் , பெற்றோர்கள் , ஜமாத்தார்கள், பொதுமக்கள் , இளைஞர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் யூசுப் , அஸ்லம் , தாவுது கனி , அபுதாகிர், நிஹால் , உதுமான் , இஸ்ஸதீன் , வாசிம் கான் , சஃபிக், முபாசிர் , சாஜித், ஃபாசில் ஆகியோருடன் இணைந்து ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button