தமிழ்நாடு

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ் உயராய்வு மையத்தின் சார்பாக நூல் வெளியீட்டு விழா 10.07.2026 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ் உயராய்வு மையம் இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் சீ.காயத்ரி தேவி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா அவர்கள் தலைமையுரையில்,
இன்றைய தலைமுறை மாணவர்கள் நாளைய எழுத்தாளராக உருவாவதற்குரிய வாய்ப்பாக இந்நூல் வெளியீட்டு விழாவை நான் கருதுகிறேன். இந்நூலின் விமர்சனங்களை எழுதிய மாணவர்களை மனதாரப்பாராட்டுகிறேன் என்று கூறினார்.
கல்லூரியின் தலைவர் திரு.மூ.விஜயராகவன், கெளரவத் தலைவர் பொறியாளர் திரு.சு.இராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரியின் செயலாளர் பொறியாளர் சு.இரா.ஸ்ரீதர், பொருளாளர் திரு.அ.ஆழ்வார்சாமி, இயக்குநர் திரு.ச.பிரபு, சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி.பரிமளா, முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் வெ.சுரேஷ் பாபு,  பொருளியல் துறைத் தலைவர் முனைவர் ரா.அழகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இரண்டாமாண்டு வணிகவியல்  துறை மாணவர்களின் விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வாசிப்புச் சுற்றுலா ‘, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்கள் (1969-2025) எனும் தலைப்பில் இரண்டு நூல்களையும், பொருளியல் துறை மூன்றாமாண்டு மாணவி ச.கார்த்திசெல்வியின் ‘பெண் பிள்ளை (சிறுகதைத் தொகுப்பு)’,  பொருளியல் துறை இரண்டாமாண்டு மாணவி அ.லாவண்யாவின் ‘போர்க் கலை (இந்தி மொழிபெயர்ப்பு)’ ஆகிய இரண்டு நூல்களையும்  மதுரை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.கு.சாமிதுரை அவர்கள் வெளியீட, கருமாத்தூர் புனித அருளானந்தர் கல்லூரி மேனாள் ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் வின்சென்ட் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.
மதுரை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.கு.சாமிதுரை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முனைவர் கோ.தேவிபூமா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்புரையில், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் மாணவர்கள் திறனாய்வாளர்களாக, மொழிபெயர்ப்பாளராக, படைப்பாளராக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் எனவும், பல்வேறு நூல்களை விமர்சனம் செய்து நூல் திறனாய்வு செய்தது பாராட்டத்தக்கது. அதேபோல் பொருளியல் துறை மாணவர்கள் எழுதிய ‘நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுநர்கள்’ எனும் நூலானது பெரிய சாதனை நூலாக வெளிவந்துள்ளது. இளம் படைப்பாளர்களை உருவாக்கும் களமாக மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி திகழ்கின்றது. இதுபோல் மாணவர்களின் தொடர் வாசிப்பும், எழுத்தும் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக விளங்கும். எதிர்காலத்தில் அனைவரும் பல்வேறு சாதனைகளைப் புரிய வாழ்த்துகள் எனக் கூறி சிறப்புரையை நிறைவு செய்தார்.
கருமாத்தூர் புனித அருளானந்தர் கல்லூரி மேனாள் ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் வின்சென்ட் அவர்கள் விழாவில் கலந்து மாணவர்களைப் பாராட்டினார்.

     நூலாசிரியர்களான ச.கார்த்திசெல்வி மற்றும் அ.லாவண்யா ஆகிய இருவரும் ஏற்புரை வழங்கினார்கள். விழா ஒருங்கிணைப்பாளர் & தொகுப்பாசிரியர் முனைவர் சே.முனியசாமி அவர்கள்  நன்றியுரை ஆற்றினார். முனைவர் தி.மல்லிகா, முதுமுனைவர் ப.திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.
பல்வேறு துறையைச் சேர்ந்த பேராசிரியர்களும், 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button