இராமநாதபுரம்

பரமக்குடியில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்: 53 நாய்களுக்கு தடுப்பூசி

பரமக்குடியில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்: 53 நாய்களுக்கு தடுப்பூசி

பரமக்குடி, ஜூலை. 11

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தலின்படியும், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் இரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது.

முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரமக்குடி கோட்ட உதவி இயக்குநர்கள் டாக்டர் பாரிவேல் மற்றும் டாக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

முகாமில் மஞ்சூர் கால்நடை மருத்துவர் டாக்டர் விக்னேஷ், காமன்கோட்டை கால்நடை மருத்துவர் டாக்டர் மனோஜ்குமார், எமனேஸ்வரம் கால்நடை மருத்துவர் டாக்டர் சந்தியா, கால்நடை மேற்பார்வையாளர் முருகேசன், கால்நடை ஆய்வாளர்கள் நைனார்கோவில் பாஸ்கரன், நெடுங்குளம் பாஸ்கரன், பாம்பூர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கீதா, பிரியங்கா, தாரணி மற்றும் வளர்மதி ஆகியோரும் பணியாற்றினர்.

இந்த சிறப்பு முகாமில் மொத்தம் 53 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமின் நிறைவில் பரமக்குடி நகராட்சி எஸ்.ஐ. மதன் நன்றி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button