கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா!!

கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை
உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 93 ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் தலைவர் முஜிப் ரஹ்மான் மற்றும் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,பள்ளி தாளாளர் சிராஜுதீன் தலைமை வகித்தார்,ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹமீது நிசா வரவேற்புரை நிகழ்த்தினார்,விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அல்பய்யினா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜாஃபிர் சுலைமான் கலந்து கொண்டார், வட்டார கல்வி பயிற்சி பள்ளி முதல்வர் வெள்ளத்துரை மஞ்சூர், காவல் ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் ஆண்டுவிழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், பேராசிரியர் பிரபாகர், வட்டாரக் கல்வி அலுவலர் தேன் மொழி,வட்டார கல்வி அலுவலர் மல்லிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர், (பொறுப்பு), சேதுபதி வாழ்த்துரை வழங்கினார்கள், இந்நிகழ்வில் பள்ளி மாணவ,மாணவிகளின் வண்ணமிகு அணிவகுப்பு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி, குறிப்பாக ராம்ப் வாக், கராத்தே, சிலம்பம், ஆகியவை மாணவ மாணவிகள் நிகழ்த்தி காட்டினார், இதில் ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






