இராமநாதபுரம்

எஸ் டி பி ஐ கட்சியின் முயற்சியால் ஏர்வாடியில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை

எஸ் டி பி ஐ கட்சியின் முயற்சியால் ஏர்வாடியில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் ஏர்வாடி பஞ்சாயத்து கமிட்டி, எஸ் டி பி ஐ கட்சி சார்பில் , கல்வி வளாகம் அருகில் அமைந்திருந்த டாஸ்மாக் கடையை அகற்றும் முயற்சியில் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்காக எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மேற்கொண்ட தொடர் போராட்ட நிகழ்வுகள், ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு,
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை சுவரொட்டி,மக்களுடன் முதல்வர் முகாமில் மீண்டும் கோரிக்கை மனு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்ட பிரகடனம்,
வட்டாட்சியருடன் அமைதிப் பேச்சு வார்த்தை ,தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்ட அறிவிப்பு போன்றவற்றில் ஈடுபட்டனர்.
மேலும் டாஸ்மாக் கடை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், கீழக்கரை வட்டாட்சியர் , ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் , கிராம நிர்வாக அலுவலர் , ஏர்வாடி காவல் ஆய்வாளர் மற்றும் போராட்டங்களில் எஸ் டி பி ஐ கட்சி உடன் துணை நின்ற ஜனநாயக ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் , நிறைவாக எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கும் கட்சி சார்பில் நன்றியினையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button