கீழக்கரையில் தெரு நாய்களுக்கு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்

கீழக்கரையில் தெரு நாய்களுக்கு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்

கீழக்கரை ஜுலை,12
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கான சிறப்பு தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம் (ARV) நடைபெற்றது.
இம்முகாம் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை இணைந்து நடத்தப்பட்டது. கீழக்கரை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முகாமில் கால்நடை உதவி மருத்துவர் மரு.த. லீலாவதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் துரோபதை மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், வெறிநோய் பரவலை தடுக்கும் நோக்கிலும் இந்த சிறப்பு முகாம் தீவிரமாக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



