திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி

இராமநாதபுரத்தில் லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் 2025-26 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சியை 10-07-2025, வியாழக்கிழமை அன்று நடத்தியது. இராமநாதபுரத்தில் Shell NXplorers, மத்திய அரசின் நிதி ஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷனுடன் இணைந்து லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் நடத்திய ஷெல் நெக்ஸ்ப்ளோர்ஸ் பயிற்சியில் 24 அடல் டிங்கரிங் லேப் பள்ளிகளை சேர்ந்த 45 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சியானது கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, பிராப்ளம் சால்விங் திறன் மற்றும் கிரிட்டிக்கல் திங்கிங் ஆகியவற்றை வளர்த்தெடுக்க உதவுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பிறகு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்தக் கற்றல்களை கொண்டு சென்று, அவர்களது அறிவியலில் சிறந்த முன்மாதிரிகளை உருவாக்க உதவுவார்கள். இந்த ஆண்டிற்கான முதல் பயிற்சி ஹோட்டல் வைசராய் ரெஸிடென்சி மேனார்-இல் 10-07-2025 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஷெல் நெக்ஸ்ப்ளோர்ஸ் பயிற்சி பெற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்: திருமதி கனகராணி – மாவட்டக் கல்வி அலுவலர் (அரசுப் பள்ளிகள்) திரு ஜே. ரவி – மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) டாக்டர். கணேஷபாண்டியன் – APO திரு கர்ணன் – PA to CEO (மேல்நிலைப் பள்ளிகள்) திரு சுரேஷ் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (NSNOP) திரு சந்திரசேகர் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு வேலுசாமி – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இவர்கள் திட்டத்தின் முக்கியத்துவம், பள்ளிகளின் பங்கு மற்றும் கல்வி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து உரையாற்றினர். மேலும், திட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் மற்றும் ஷெல் நெக்ஸ்ப்ளோர்ஸ் குழுமத்திற்கு அனைவரும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். விழா ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுப், பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.





