இராமநாதபுரம்

“கீழக்கரை வளர்ச்சிக்கு 5 முக்கிய கோரிக்கைகள் – புதிய கலெக்டரிடம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு மனு”

“கீழக்கரை வளர்ச்சிக்கு 5 முக்கிய கோரிக்கைகள் – புதிய கலெக்டரிடம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு மனு”

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற திரு. சிவகுரு பிரபாகரன் IAS அவர்களை கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சந்திப்பின்போது கீழக்கரை நகரின் நீண்டநாள் கோரிக்கைகளான தாலுகா நீதிமன்றம், கருவூலகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைத்துத் தருமாறு வலியுறுத்தினர்.

மேலும், கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் செயல்தலைவர் முஹம்மது அஜிஹர், செயலாளர் சர்பரஸ் நவாஸ், பொருளாளர் முஹம்மது ஃபரூஸ், துணை செயலாளர் நெய்னா முஹம்மது, PRO சேகு சதக் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button