இராமநாதபுரம்

தடகள போட்டிகள்

பாரதியார் மற்றும் குடியரசுத் தினம் இராமநாதபுர குறுவட்ட தடகள போட்டிகள் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இத் தடகளப் போட்டியில், 17 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் அரிகோபால கிருஷ்ணன் ஈட்டி எறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான்.

மேலும், 14 வயதுக்கு கீழ்பட்டோர் பிரிவில், உயரம் தாண்டுதலில் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழரசன் இரண்டாமிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் திருமுகிலன் மூன்றாமிடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. அருண் அற்புதராஜ் அவர்களையும், மதுரை – இராமநாதபுரம் திருமண்டல பேராயர். மதிப்புமிகு ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகர், பள்ளி தாளாளர் திரு. ஜான்சன் இஸ்ரேல், பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. ஆல்பர்ட் கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button