இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க ஆர். எஸ். மங்கலம் அண்ணா திடலில் ஒன்றிய கழகம் மற்றும் பேரூர் கழகம் சார்பாக முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் 136- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் மாவட்டம். ஒன்றியம். பேரூர் கழகம் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.





