இராமநாதபுரம்

கமுதியில் காமராஜர் 124-வது பிறந்த நாள் விழா

கமுதியில் காமராஜர் 124-வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா க்ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் கொண்டாடப்பட்டது
கமுதி – நாடார் பஜாரில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு நாடார் உறவின் முறை நாளது மாத முறைகாரர் ஆறுமுகம் மற்றும் டிரஸ்டிகள், க்ஷத்திரிய நாடார் ஆண்கள், பெண்கள், மெட்ரிகுலேஷன் , தொடக்கப்பள்ளி மற்றும் பல்வேறு கமிட்டிகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர்
காமராஜர் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன், முன்னாள் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ், துணை சேர்மன் அய்யனார் மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டாரத் தலைவர் பழக்கடை ஆதி தலைமையில்,
காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் அக்கட்சியை சார்ந்த அழகர்சாமி, அபிராமம் சுரேஷ், முனியாண்டி, முனியசாமி, காமராஜ், பாலு, ஆறுமுகம் உட்பட
பலர் கலந்து கொண்டனர்
தமிழக வெற்றிக்கழகம் சார்பில்
காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதே போல்,
காளியம்மன் கோவில் தெரு பகுதியில் காமராஜர் திருவுருவ படத்திற்கு தவெக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button