இராமநாதபுரம்
அ.திமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு நாள்

அ.திமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு நாள்..

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அண்ணா திடலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ். மங்களம் அ.திமுக. ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராஜா. கருப்பையா. திருமலை. பேரூர் கழகச் செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லாஹ் . ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜபாண்டி . மாவட்ட பொறுப்பாளர்கள் செய்யது இப்ராஹீம் அலி ஷாஜகான்.அயூப்கான். கனகராஜ். மகளிர் அணி செயலாளர் சுலோச்சனா. முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கவேலு. நவாஸ்கான். புருஷோத்தமன் கட்சியின் பொறுப்பாளர்கள். மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.




