மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர்
பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை
மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்,மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்
நேற்று துவங்கின. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளின் துவக்க விழாவிற்கு கல்லூரி தலைவர் அகமதுயாசின் தலைமை தாங்கினார். காவல்துறை எஸ்ஐ சுதன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராமர் அனைவரையும் வரவேற்று பேசினார் . பின்னர் சமாதான புறாக்களை பறக்க விட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விழா துவங்கப்பட்டது இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
15 வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் பெண்களுக்கான வாலிபால், கபடி, எரிபந்து, கோ -கோ, செஸ்,கேரம், பூப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளும், ஆண்களுக்கு கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கபடி, பூப்பந்து, செஸ்,கேரம், டேபிள் டெனனிஸ் போன்ற போட்டிகளும் நடைபெற்று
வருகிறது. இவ்விழாவில்
பேராசிரியர் திருவேணி நன்றியுரையாற்றினார் உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் தர்மமுனீஸ்வரன் விழாவினை ஒருங்கிணைத்தனர்.





