இராமநாதபுரம்
இலவச கண் மருத்துவ முகாம் பரமக்குடியில் நடைபெற்றதுநூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்

இலவச கண் மருத்துவ முகாம் பரமக்குடியில் நடைபெற்றது
நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் திருமண மஹாலில் 116-வது இலவச கண் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமினை எமனேஸ்வரம் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் கீழ முஸ்லிம் ஜமாத் சபை ஆகியவை இணைந்து நடத்தின.
முகாமினை நிறுவன தலைவர் முனைவர் அ.முகமது அலி ஜின்னா அவர்கள் துவக்கி வைத்தார்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பிரச்சனை உள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
சமூக நலப்பணியாக நடைபெற்ற இந்த முகாம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.




